நீதிபதி முன்பு மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்- மனைவி படுகாயம்

797

சென்னை உயர்நிதிமன்ற வளாகத்தில் நீதிபதி முன்பு  மனைவியை கணவன்  கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்திற்கு விவாகரத்து வழக்கில் ஆஜராக வந்த மனைவியை நீதிபதி கலைவாணன் முன்பு கணவன் சரவணன் கத்தியால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உச்சக்கட்ட பாதுகாப்பு இருக்கும் உயர்நீதிமன்றத்தில் அதுவும் நீதிபதி முன்பே கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுகாயமடைந்த வரலஷ்மி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நீதிபதியின் முன்பு கொலை முயற்சி நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ள சூழலில், பாதுகாப்பில் இருக்கும் காவல்துறை சரியான முறையில் சோதனை செய்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கைது செய்த சரவணனிடம் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement