மருந்து வாங்க 30 ரூபாய் கேட்ட மனைவி..! தலாக் கூறிய கணவர்..!

284

முஸ்லீம் பெண்கள் கணவர்கள் 3 முறை தலாக என்று கூறினால் விவாகரத்து பெறும் முறை வழக்கில் இருந்து வந்தது. இந்த முறைக்கு எதிராக மத்திய அரசு சார்பில் அதிரடி சட்டம் ஒன்று இயற்றப்பட்டது.

முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி, தலாக் கூறும் கணவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பது பின்வருமாறு:-

“நான் என் கணவரிடம் காய்ச்சலாக இருப்பதாக கூறி மருந்து வாங்க ரூபாய் 30 கேட்டேன். அதற்கு கோபமடைந்த என் கணவர் என்னை கடுமையாக திட்டினார். இதையடுத்து முத்தலாக கூறி என்னை விவகாரத்து செய்தார்.

இதைத்தொடர்ந்து கணவரின் குடும்பத்தினரும் என்னை வீட்டில் இருந்து விரட்டிவிட்டனர். இப்போது ஆதரவு இல்லாமல் உள்ளேன்.”

இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.