முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவர்!

73

ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் சிகாமணி (40) இவருக்கும். ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த ரெங்கசாமி மகள் சுதாமணி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.

சிகாமணி அடிக்கடி வெளிநாடு சென்று விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் மனைவியை வரதட்சணை கேட்டு சிகாமணி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். இந்நிலையில் சிகாமணி மனைவி வீட்டாருக்கு தெரியாமல் ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த நதியா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதையறிந்த சுதாமணி அதிர்ச்சியடைந்து மகளிர் போலீஸ நிலையத்தில் புகார் செய்தார்.இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிகாமணி அவரது 2-வது மனைவி நதியா ஆகியோரை தேடி வருகின்றார்.