“என் கூட வரமாட்டியா..” – மனைவியை பிளேடால் வெட்டிய நபர்..! 60-க்கும் மேல் தையல்..!

869

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த தம்பதியினர் விஸ்வநாதன் மற்றும் மீனா. இவர்கள் கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மனைவி மீனா வசித்து வரும் வீட்டிற்கு வந்த விஸ்வநாதன், என்னுடன் வாழ வரியா இல்லையா என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் தகாராறு மூண்டுள்ளது.

இதில் கடும் கோபமடைந்த விஸ்வநாதன், மறைத்து வைத்திருந்த பிளேடைக்கொண்டு, மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதையடுத்து மனைவி மீனா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அவருக்கு 60-க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விஸ்வநாதனை தேடி வருகின்றனர்.

Advertisement