விமானத்தில் தூங்கிய மனைவி! 6 மணி நேரம் கணவர் செய்த செயல்- வைரலாகும் புகைப்படம்

2686

ஆணோ , பெண்ணோ தன் துணை மீதான காதலை எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிற  இந்தப் படமும்  அப்படியொரு காதலைச் சொல்லியபடிதான் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மனைவி மீதான ஒரு கணவரின் பேரன்பை அருகிலிருந்து கவனித்த சக பயணி ஒருவர இதைப் படமெடுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்தது வைரலாகியுள்ளது.

இப்படியொரு ஆச்சர்ய புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டவரின் பெயர் கோட்னி லீ ஜான்சன். அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த என்.ஜி.ஓ ஆவார்.

விமானப் பயணத்தில் தான் கண்ட காட்சியைத்தான் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் ஆறு மணி நேரம் நின்றுகொண்டிருந்த கணவர்; நிம்மதியாக உறங்கிய மனைவி.

இதுதான் காதல் என்று ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்ய நெட்டிசன்கள் ஆளுக்கொரு கமென்ட்டுடன் களமிறங்கிவிட்டார்கள்.

அவர்கள் வெளிநாட்டு தம்பதியர். கணவர் நின்றபடி இருக்க, மனைவி கணவருடைய இருக்கையிலும் சேர்த்து நிம்மதியாகப் படுத்து உறங்கிக்கொண்டிருக்கிறார். இப்படி ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அல்ல… கிட்டத்தட்ட 6 மணி நேரங்கள். அந்தக் கணவர் நின்றபடியே விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.

இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், கணவரின் காதலை  சிலர் தன்னலமற்ற கணவர் என்று கொண்டாட ஆரம்பித்துள்ளனர். சுயநலம் பிடித்தவர் என்று தூங்கிக்கொண்டிருந்த மனைவியை சிலர்  திட்டவும்  செய்தனர்.

இன்னொரு பெண் அறிவுரையும் சொல்லியிருக்கிறார். பாவம் அந்த மனைவிக்கு உடல்நிலை சரியில்லை போல என்று ஒரு பெண் வருத்தப்பட இன்னொருவர் ‘டைட்டானிக்’ பட கிளைமாக்ஸில் நாயகியைக் காப்பாற்றிவிட்டு நாயகன் தண்ணீருக்குள் இருக்கும் GIF-ஐ போட்டு செல்ஃபிஷ் என்று கமென்ட் செய்திருக்கிறார்.

இதனைத் தாங்க முடியாத சிலர் அது அவங்களோட சொந்த விஷயங்க. அதைப்பத்தி நாம யார் கமென்ட் செய்ய..? ஆனால் அதுவொரு நல்ல காதல் புகைப்படம்’ எனப் பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of