தாய் வீட்டில் மனைவி. தற்கொலை செய்துகொண்ட கணவன்.

169

நாகூரை அடுத்த வடக்கு பால் பண்ணை சேரியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி பூரணராதா.
ராஜ்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான பூரண ராதா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதையடுத்து ராஜ்குமார் இனி நமக்குள் பிரச்சனை வராது என்று சமரசம் செய்து மீண்டும் தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அவரது மனைவி பூரண ராதாவை அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்து உள்ளார்.

இதனால் மனமுடைந்த ராஜ்குமார் வீட்டுக்கு வந்து வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of