சிகரெட் நெருப்பால் மனைவியை எரித்த கணவன்…!

513

சென்னையில் வசித்து வரும் தம்பதியினர் ராஜன் – பஞ்சவர்ணம். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் வழக்கம் போல் சண்டையிட்டுக்கொண்டிருந்தபொழுது கோபத்தின் உச்சிக்கு சென்ற ராஜன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட் நெருப்பால் பற்ற வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீ பரவி பஞ்சவர்ணம் துடித்துள்ளார்.

அவரின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து பஞ்சவர்ணத்திடம் அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கிக்கொண்டு கொலை செய்ய முயன்ற கணவன்  ராஜனை கைது செய்தனர்.

Advertisement