காதலனுடன் ஓட்டம் பிடித்த ப்ரீத்தி..! புகார் அளித்த கணவன்..! பிறகு வெளியான அதிர்ச்சி தகவல்..!

1334

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் ப்ரீத்தி என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் ரமேஷ் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், தனக்கும், ப்ரீத்தி என்ற பெண்ணிற்கும் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது என்றும், தற்போது தனது மனைவி அகில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

ப்ரீத்தி அகிலை திருமணம் செய்து கொண்டுள்ளதால், 2 குழந்தைகளும், தானும் தவித்து வருகிறோம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், பல்வேறு பகீர் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

அவர் கூறியதன் விவரம் பின்வருமாறு:-

ப்ரீத்திக்கு 15 வயது இருக்கும் போது, அவரது தாய், 50 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக, மிரட்டி ரமேஷிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்தை ஆவணப்படி பதிவு செய்வதற்கு, தனது வயது சான்றிதழை பயன்படுத்தியுள்ளார்.

நாட்கள் செல்ல, செல்ல, ரமேஷ், ப்ரீத்தியை தினமும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், இரு குழந்தைகளையும் தன்னிடம் தர மறுத்து விரட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த ப்ரீத்தி, காதலன் அகிலை முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த தகவல் அனைத்தையும், ப்ரீத்தி போலீசார் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார்.

15 வயதுள்ள பெண்ணை திருமணம் செய்வதற்காக திருமண பதிவு சான்றிதழில் மணப்பெண்ணின் வயது சான்றுக்கு பதிலாக, மாமியாரின் வயது சான்றிதழை இணைத்து மோசடி செய்ததால், ரமேஷ்குமாரின் மனைவி யார் என்று முடிவுக்கு வர முடியாமல் போலீசாரும் தவித்து நிற்கின்றனர்.

Advertisement