கேவலமான காரணம்… மனைவியை விவாகரத்து செய்த கணவர்!

687

முன்னதாக இந்தியாவில் முத்தலாக் தடை சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில். இஸ்லாமிய பெண்களை சிறு காரணம் காட்டி முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது தண்டனைகுறியது ஆகும்.

இந்த சட்டத்திருத்தத்தின் படி முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய ஆண்களுக்கு., மூன்றாண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிகாரை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவரை அவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ள விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது மனைவி மரு அருந்த மறுப்பதாகவும், குட்டை பாவாடை அணிய மறுப்பதாகவும் கூறி விவாகரத்து செய்ய முற்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நூரி பாத்மி தெரிவிக்கையில். கடந்த 2015-ஆம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவருடன் எனக்கு திருமணம் நடைப்பெற்றது.

திருமணத்தை அடுத்து நாங்கள் டெல்லிக்கு குடி பெயர்ந்தோம். பின்னர் டெல்லியில் உள்ள இளம்பெண்களை போல் என்னை மார்டன் உடைகளை அணிய எனது கணவர் கட்டாயப்படுத்தினார்.

மேலும் அவரது விருப்பபடி நான் உடைகளை அணிய மறுப்பு தெரிவித்தால் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ய முற்பட்டார். என தெரிவித்துள்ளார்.

நெடு நாள் சித்ரவதைக்கு பின்னர் தன்னை வீட்டை விட்டு வெளியேறுமாறும் இம்ரான் வர்புறுத்தியதாக நூரி தெரிவித்துள்ளார்.  பாதிக்கப்பட்ட பெண் இந்த விஷயத்தில் பெண்களின் உரிமைகளுக்கான அரசு கண்காணிப்புக் குழுவையும் அணுகியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கண்கானிப்பு குழு இம்ரானுக்கு அறிவிப்பை அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பீகார் மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் தில்மணி மிஸ்ரா தெரிவிக்கையில். தனது ஆசைக்கு அடிப்பணியாத மனைவி இரண்டு முறை கருவுற்ற போது இம்ரான் கட்டையாமாக கரு கலைப்பு செய்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி இம்ரான் நூரிக்கு முத்தலாக் கூறியதாக தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக இம்ரானுக்கு நாங்கள் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம். அவரை அழைத்து விரைவில் விசாரிப்போம்” என தெரிவித்துள்ளார்.

முத்தலாக் என்ற இஸ்லாமிய பாரம்பரியத்தின் மூலம் உடனடி விவாகரத்து செய்வதை தடைசெய்யும் சட்டம் ஜூலை மாதம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of