மனைவியின் பிறந்த நாள்… சுறா வயிற்றில் திருமண மோதிரம்.. சுறாக்களுக்கு இரையான கணவர்..!

960

இங்கிலாந்தின் எடின்பர்க்கை சேர்ந்த ரிச்சர்ட் மார்ட்டின் டர்னர் என்ற 44 வயது நபர் தன்னுடைய மனைவியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இந்திய பெருங்கடலில் உள்ள ரீயூனியன் தீவுகளில் கொண்டாட முடிவு செய்து அங்கு சென்று கடலில் நீச்சல் அடித்து கொண்டுருக்கும் போது திடீரென மாயமானார்.

இதனையடுத்து கணவர் காணவில்லை என்று போலீஸிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தேடும் பாணியில் ஈடுப்பட்டு வந்த போலீஸ் சுறாக்கள் சாப்பிட்டிருக்க வாய்ப்புள்ளது என்று 4 சுறாக்களை பிடித்து பார்த்த போது சுறாக்கள் வயிற்றில் சில மனித பாகங்கள் இருந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ரிச்சர்டின் திருமண மோதிரம் இருந்த கைகள் ஒரு சுறாவின் வயிற்றில் இருந்துள்ளது. இதனால் சுறாக்கள் சாப்பிட்டதை உறுதி செய்தனர். மற்ற சுறாக்களின் உடல் பாகங்களை டி.என்.ஏ பரிசோதனைக்கு உள்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சந்தோஷமான நாளை கொண்டாட சென்ற தம்பதிக்கு இப்படியோரு கவலைகிடமான சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of