என்கவுன்டர் செய்யப்பட்டவர்கள் குற்றம் செய்தார்களா? சிசிடிவி காட்சி வெளியீடு

1524

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியான ஷாத்நகர் அருகே உள்ள டோல்கேட் அருகே கடந்த மாதம் 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் தனியாக டோல்கேட்டை கடப்பதை கண்ட , கேசவலு, சிவா, முகமது பாஷா, நவீன் ஆகியோர் வேண்டுமென்றே பெண்ணின் வாகனத்தை பஞ்சர் செய்துள்ளனர்.

இதனை அடுத்து அந்தப் பெண் உதவியின்றி தவித்து நிற்கும் போது உதவுவது போல சென்று அவரை அங்கிருந்து கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றுள்ளனர்.

அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதனை அடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், கேள்விகளையும் பலர் முன்வைத்துள்ளனர். இதற்கிடையே என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நான்கு பேரையும் புதைக்க நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

இந்த நிலையில் கொல்லப்பட்ட 4 பேரும் குற்றம் செய்தனர் என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சி ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 27-ம் தேதி கால்நடை மருத்துவரை கொலை செய்த பின் அவரது உடலை எரிப்பதற்கு அந்த நாள்வரில் இரண்டு பேர் பெட்ரோல் வாங்கும் சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of