ஆறுதல் கூறிய உறவினர்..! உயிரோடு கொழுத்திய குடும்பத்தினர்..! பரபரப்பு சம்பவம்..!

2180

ஐதராபாத்தில் software இன்ஜினியராக பணியாற்றி வருபவர் பவன் குமார். இவரது உறவினர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார். இதன்காரணமாக, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, பல்வந்தபூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, பவன்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள், அவர் உயிரிழந்ததற்கு, நீ சூனியம் செய்ததே காரணம் என்று தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, அவரை ஒரு அறையில் பூட்டியவர்கள், உயிரோடு கொழுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

ஆனால், காவலர்கள் வருவதற்கு முன்பாகவே, பவன் முழுவதும் எரிந்து நிலையில், உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, உறவினர்களை கைது செய்தனர்.

Advertisement