கொடுமை.., எப்போது நிறுத்தப்படும்.., – மருமகளுக்கு முன்னாள் நீதிபதி செய்த கொடுமை..!

552

ஹைதராபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமமோகன ராவின் மகன் வஸிஸ்தா, சிந்து ஷர்மா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், வரதட்சணை கேட்டு மனைவியை அடிக்கடி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கணவர் மட்டுமல்லாது தமது மாமனாரான முன்னாள் நீதிபதி ராமமோகன ராவ், மாமியார் துர்கா ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக சிந்து ஷர்மா புகார் அளித்தார்.

இந்நிலையில் கணவர் குடும்பத்தினரால் சிந்து ஷர்மா தாக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் குழந்தையின் அழுகையை பொருட்படுத்தாமல், மாமனார் ராமமோகன ராவ் கொடூரமாக தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.