வாக்குவாதத்தில் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.., கணவனின் வெறிச்செயல்

408

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் விஜய்(32). இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

காவல் துறையினர் கூறுகையில், சனிக்கிழமை (பிப்.23) சம்பவத்தன்று விஜய் குடித்திருந்ததால் அவருக்கும், அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மின்விசிறியில் புடவையைக் கட்டி மனைவியை துாக்கிலிட்டு கொன்றதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஓஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of