பெண் டாக்டர் கொலை குற்றவாளிகள் சுட்டுக்கொலை.. – எரித்துக்கொல்லப்பட்ட இடத்திலேயே போட்டுத்தள்ளியது காவல்துறை..!

6159

ஹைதரபாத் பெண் டாக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை போலீஸ் அதிரடியாக என்கௌண்டர் செய்துள்ளது.

பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட இடத்திற்கு குற்றவாளிகளை கொண்டு செல்லும்போது 4 பேரும் தப்பிக்க முயன்றதால் சுட்டுக் கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 27 வயது கால்நடை பெண் மருத்துவரை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அங்குள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் 4 குற்றவாளிகள் தப்பிக்க முயன்றதாக கூறி போலீஸ் என்கவுண்டர் செய்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of