ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு – SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்

693

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதுச்சேரியில் S.D.P.I கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி, சுதேசி மில் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல்லா தலைமை தாங்கினார்.

இதில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசின் இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.