ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து..? சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

399

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் எதிர்த்து தமிழகம், புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் தாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், சட்டசபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், சட்டசபை இன்று கூடியதும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.

பின்னர் அந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of