ஹைட்ரோ கார்பன் எடுப்பது, தமிழகத்தையே அழிக்கும் செயல் -CPI

1311

ஹைட்ரோ கார்பன் எடுப்பது, தமிழகத்தையே அழிக்கும் செயல் என்பதால், டெல்டா மாவட்ட விளைநிலங்களில் கை வைக்க விடமாட்டோம் என்று CPI-யின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தஞ்சையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய சி. மகேந்திரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியின் போது மீத்தேன் திட்டத்திற்கு முக. ஸ்டாலின் கையெழுத்திட்டதை குறிப்பிட்டார்.

இந்நிலையில், தற்போது இந்த மீத்தேன் திட்டத்தையே, ஹைட்ரோ கார்பன் என்ற வேறு பெயரில் மாற்றி, டெல்லா மாவட்டங்களின் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது சங்க காலம் முதல் புகழ்பெற்று விளங்கும் டெல்டா மாவட்ட விவசாயத்தை அழிக்க நினைக்கும் செயல் என்பதால், டெல்டாவில் கை வைக்க விடமாட்டோம் என்று சி.மகேந்திரன் ஆவேசமாக கூறியுள்ளார்.

Advertisement