அவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்

443

‘தம்பி’ முதல் முறையாக ஜோதிகா மற்றும் கார்த்திக் இணைத்து நடிக்கும் படமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்திக்கின் அக்காவாக ஜோதிகா நடித்துள்ளார், அண்மையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. மேலும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

நிகிலா இந்த படத்தில் நடித்த அனுபவத்தை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன்.

அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் ‘தம்பி’ படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறியா? என்றார். அவர் நேர்மையாக கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன் என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of