இரு நாடுகளிடையே போர் ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்.

631
Vaiko

புல்வாமா தாக்குதலுக்கு தக்க பதிலடியாக இந்திய விமானப்படை இன்று அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கியது. இந்திய விமானப்படையின் மிராஜ் -2000 விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

12 போர் விமானங்கள், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தகல்வல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி தாக்குதலின்போது, பலாகோட், சகோதி, முசாப்பர்பாத் ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ஜெய்ஷ் இ முகம்மது இயக்க கட்டுப்பாட்டு அறையும் இந்த தாக்குதலில் சின்னாபின்னமானது.

இந்திய விமானப்படையின் இந்த வீரதீர செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துவருகின்ற இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் நம் தாய்நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவவீரர்களை தலைவணங்குகிறேன், அதே நேரத்தில் பாசிச மனப்பான்மை உடையவர்கள் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த செயலுக்கும் துணிவார்கள்.

இந்த நாடு கலாசாரம், மொழி, இனம், மதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இங்கு பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி விடக்கூடாது. பிரதமர் நரேந்திர மோடி பாசிச மனப்பான்மையுடன் செயல்படுகிறார். இதனால் விபரீத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இருநாடுகளுக்கிடையே போர் ஏற்படுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்றும் தனது கருத்தை தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of