மதுபான கடையில் பெண்கள் வரிசையில் நிற்பது வேதனை! சீமான் பேச்சு!

713

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று அரவக்குறிச்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், மதுபான கடைகளை மூடினால் கள்ளச் சாராயம் பெருகும் என கூறும் ஆட்சியாளர்களால் மக்களை எப்படி காப்பாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், மதுபான கடையில் மது வாங்க பெண்களும், பள்ளி மாணவர்களும் வரிசையில் நிற்பது வேதனை அளிப்பதாக கூறினார்.

தகுதியும், நேர்மையும் இல்லாத ஆட்சியாளர்கள், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of