“நானும் படிக்க போறேன்” ஐஐடி வகுப்பறைக்குள் நுழைந்த மாடு | IIT | Cow in Class

259

இந்தியாவின்  பெருமைமிகு ஐஐடி நிறுவனத்தின் வகுப்பறைக்குள், மாடு ஒன்று சாவகாசமாக வந்துச் சென்றது, பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்று, மும்பையில் இயங்கி வரும் ஐஐடி கல்வி நிறுவனம். அண்மையில், இந் நிறுவனத்தில்,  மாடு ஒன்று புகுந்துவிட்டது.

விறுவிறுப்பாக பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென வகுப்பறைக்குள் நுழைந்தது மாடு. சாவகாசமாக, வகுப்பறை முழுவதும் சுற்றி, சுற்றி வந்த அம்மாட்டை, தடியால் பயமுறுத்தி விரட்டியுள்ளனர்.

பெருமைமிகு கல்வி நிறுவனத்தின் வகுப்பறைக்குள் மாடு ஒன்று வந்துச் சென்ற சம்பவம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பை கல்வி நிறுவனத்தின் பாதுகாப்பு எந்தளவுக்கு உள்ளது என்பது இச் சம்பவம் எடுத்துக் காட்டுவதாக, கண்டனங்கள் எழுந்துள்ளன.

வகுப்பறைக்குள் மாடு வந்துப் போனச் சம்பவம், பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்குள் நகைப்புடன் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என்றால் தவறில்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of