எவ பார்த்த வேலை இது…, நா இன்னும் சாகல…, அதிர்ச்சியில் சுரேஷ் ரெய்னா!

931

இந்திய கிரிக்கெட் அணியின் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல கோடி ரசிகர்களால் குட்டி தல என்று அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலத்தை தன் வசமாக்கிக்கொண்டார்.

ஆனால், தற்போது அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இவர் கார் விபத்தில் மாட்டி உயிரிழந்து விட்டதாக வதந்திகள் பரவி வருகின்றனர்.

இந்த வதந்தினால் இவரும் இவரின் குடும்பத்தினரும் கடும் மன உடைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் “கடந்த சில நாட்களாக நான் கார் விபத்தில் இறந்துவிட்டதாக போலியான செய்தி வந்த வண்ணம் உள்ளது. இது என்னைக் காயப்படுத்தியுள்ளது. இது எனது குடும்பத்தையும், நண்பர்களையும் மிகுந்த கவலையடையச் செய்துள்ளது.

இதுபோன்ற செய்திகளை புறக்கணியுங்கள். கடவுள் அருளோடு நான் நன்றாக இருக்கிறேன். ‘யூ டியூப்’ வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தவறான காட்சிகளை நீக்குமாறு புகார் அளித்துள்ளேன். இதுதொடர்பாக விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of