நான் நாட்டை விட்டு ஓடிப்போகல…. – விளக்கம் சொன்ன மோசடி மன்னன்

445

தான் நாட்டை விட்டு ஓடவில்லை என்றும், சிகிச்சைக்காகவே வெளிநாடு சென்றதாகவும் வங்கி மோசடியாளன் மெகுல் சோக்சி புதிய விளக்கம் அளித்துள்ளார்.

வங்கி மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மெகுல் சோக்சியை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மெகுல் சோக்சியை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை பலமுறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் பதில் அளித்து வந்தார்.

இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ள மெகுல் சோக்சி, தான் நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை என்றும், மருத்துவ சிகிச்சைக்காகவே வெளிநாடு வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது ஆன்டிகுவா நாட்டில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும், உடல் நிலை சீரானதும் இந்தியா திரும்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of