அதற்கு நான் தகுதியானவன் அல்ல – பாக். பிரதமர்.

192
imrankhan4.3.19

கடந்த 27ம் தேதி நமது தமிழக விமானப்படை வீரர் அபிநந்தன் தான் பயணித்த MIG ரக போர் விமானத்தில் சென்றபோது துரதிஷ்டவசமாக பாகிஸ்தானிடம் சிக்கினார். பின்னர் பாக். பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக அறிவித்தார். அதன்படி கடந்த 1ம் தேதி இரவு 9 மணியளவில், அபிநந்தன் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

இம்ரான் கானின் இந்த நடவடிக்கையால் இரு நாடுகளிடையே நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்தது. எனவே, அவருக்கு பாகிஸ்தான் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘நான் அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவன் அல்ல’ என பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பரிசுக்கு தகுதியானவர், காஷ்மீர் பிரச்சனையை தீர்த்து வைத்து அமைதிக்கும், மனித குல வளர்ச்சிக்கும் பாடுபடுபவரே ஆவார் என இம்ரான் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.