நான் முதலமைச்சரானால்….. நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு

1362

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், சர்கார் படத்தில் தான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என தெரிவித்தார்.

லஞ்சம், ஊழலை அடியோடு ஒழிப்பேன் என்று பேசிய நடிகர் விஜய், வெற்றிக்காக எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்கலாம், ஆனால் நாம் வெற்றியடைந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு கூட்டம் உழைத்து கொண்டிருப்பதாக கூறினார்.

மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை என்று குறிப்பிட்ட அவர், மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலமும் நல்லதாகவே இருக்கும் என தெரிவித்தார்.

மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது என்றும் ஆனால் சர்கார் படத்தில் அரசியலிலேயே மெர்சல் பண்ணியிருப்பதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினி, விஷால் போன்றவர்கள் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், தற்போது நடிகர் விஜயின் பேச்சால் அவர் அரசிலுக்கு வருவாரா என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.