நான் விராட் கோலி..! – வார்னர் மகளின் வைரல் வீடியோ..!

399

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் வார்னர். இவரது மூன்றரை வயது மகள் இண்டி ரே கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது.

அதில் வார்னர் பந்துவீச இண்டி ரே கிரிக்கெட் விளையாடுகிறாள். ஓவ்வொரு முறையும் பந்தை அடித்துவிட்டு ‘நான்தான் விராட் கோலி’ என்று சொல்லியிருக்கிறாள்.

இதனை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வார்னர் மனைவி கேண்டிஸ் ‘இந்தியாவில் என் இளைய மகள் அதிக நாட்களை கழித்திருக்கிறாள். அதனால்தானோ என்னவோ விராட் கோலி ஆக விரும்புகிறாள்’ என பதிவிட்டுள்ளார்.