தமிழ்நாட்டில் அடிக்கும் குளிர் அமெரிக்கா வந்து என்னைத் தாக்குது..! – விஜயகாந்த்

1009

தமிழ்நாட்டில் அடிக்கும் குளிர் அமெரிக்காவில் வந்து தன்னை தாக்குவதாக விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை எடுக்க அவ்வப்போது அமெரிக்கா சென்று வருகிறார். இதற்கிடையே அவருக்கு உடல்நிலை மோசமாகிவிட்டதாக வதந்தி பரவியதை அடுத்து விஜயகாந்தின் உடல் நலம் குறித்து பிரேமலதா விளக்கம் அளித்தார். முன்னதாக அமெரிக்காவில் தன் நண்பர்களுடன் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்ட கிறிஸ்துமஸ் விழா தொடர்பான புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகின. 

இந்நிலையில் இன்று விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் அன்னை மண்ணில் வரலாறு காணாத கடும் குளிர் என்று கேள்விப்படும் போது, அமெரிக்க குளிரில் என்னால் அதை உணர முடிகிறது ! என்று டுவீட் செய்துள்ளார். அந்த டுவீட்டில் விஜயகாந்த் போஸ் கொடுத்து நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of