தனிப்பட்ட முறையில் நான் யாரையும் விமர்சித்தது இல்லை – எச்.ராஜா

523

தனிப்பட்ட முறையில் நான் ஒருபோதும் யாரையும் விமர்சித்தது இல்லை என சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க-வை நான் ஒருபோதும் விமர்சித்தது இல்லையென சிவகங்கையில் ஹெச்.ராஜா பேசியது அ.தி.மு.க-வினரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

சிவகங்கை அ.தி.மு.க மாவட்டக்கழக அலுவலகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பேசும்போது,  பாஜக தலைமையிலான அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும்.

நான் எம்.பி-யாக இருக்கும்போது செய்ய முடியாத விடுபட்டுப்போன பணிகளை அண்ணன் ராஜா செய்வார். அவருக்குத் துணையாக நானும் அமைச்சரும் இருப்போம்’ என்று உறுதியளித்தார்.

சிவகங்கை பி.ஜே.பி வேட்பாளராகக் கட்சி அறிவிப்பதற்கு முன்பே தன்னை வேட்பாளராகப் பிரகடனம் செய்துகொண்ட ராஜா பேசும்போது, அத்வானி காலத்திலிருந்தே பா.ஜ.க, அ.தி.மு.க-வோடு நேச்சுரல் கூட்டணி வைத்திருக்கிறது.

ஏதாவது, பிரச்னைகளுக்காக மட்டுமே அ.தி.மு.க-வை விமர்சனம் செய்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க-வினர் யாரையும் நான் ஒருபோதும் விமர்சனம் செய்து பேசியது கிடையாது.

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை டிஸ்யூ பேப்பர் போன்றது. பிரதமர் மோடி இந்தத் தேர்தல் மூலம் மீண்டும் பிரதமராவார். காவேரி குண்டாறு இணைப்புத் திட்டம் நான் எம்.பி-யானவுடன் அதற்கு முயற்சி எடுப்பேன்’’ என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of