மீடூ – இதுவரை நான் அதை எதிர்கொண்டதில்லை | Tamannaah

280

பெண்களுக்கு தாங்கள் வேலைபார்க்கும் துறைகளில் தங்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்களை மீடூ என்ற இயக்கம் மூலம் சமூக வலைதளங்களில் கூற தொடங்கினார்கள். ஹாலிவுட்டில் பிரபலமான இந்த மீடூ இயக்கம் இந்தியாவிலும் தொடர்ந்தது. இதில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் பெரும் சர்ச்சையானது. அதனை தொடர்ந்து இயக்குனர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீது மீடூ புகார்கள் வந்தன.

தற்போது பிரபல நடிகை தமன்னா, ‘மீடூ’ புகார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். என் இயல்பின் காரணமாக வேலை செய்யும் இடத்தில் பாலியல் துன்புறுத்தலை நான் இதுவரை எதிர்கொண்டதில்லை. நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

அப்படி ஒரு அனுபவம் இல்லாமல் போனது எனது அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். ஆனால் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்ட பெண்கள் துணிச்சலாகப் பேசியது நல்லது. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போவது வருத்தமானது என்று கூறியுள்ளார்.