சீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan

247

நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தல் திமுக நிச்சயம் வெற்றிபெரும் என்றும், கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை என்றும் கூறினார்.

முதலமைச்சர் என்பவர் பொறுப்புடன் பேச வேண்டும். தமிழகம் முழுவதும் டெங்கு பரவிவரும் நிலையில் சுகாதாரத் துறை என்பது இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், தலைவர்கள் இறப்புக்கு பிறகு அவர்கள் குறித்து அவதூராக யாரும் பேசுவதில்லை என்றும், இப்படி பேசுபவர்கள் தமிழக அரசியலில் இருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடு என்றும், சீமானைப்பற்றி பேசி தமது தரத்தை தாழ்த்திகொள்ள விரும்பவில்லை என்றும் துரைமுருகன் கூறினார்.