வடகொரிய அதிபர் கிம்முடன் காதலில் விழுந்தேன் – அபதிபர் டிரம்ப்

498

அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக இருந்து, இப்போது நண்பர்களாக மாறியுள்ளனர்.

இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் முதலாக உச்சிமாநாட்டில் சந்தித்து பேசினார்கள்.

இந்த பேச்சு வார்த்தையின் உலகையே வியக்க வைத்தது. மீண்டும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப்பேச விரும்புவதாக டிரம்புக்கு அவர் சமீபத்தில் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் வெர்ஜீனியா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய டிரம்ப், வடகொரிய தலைவர் கிம்முடன் தான் காதலில் விழுந்து விட்டதாக பேசினார்.

வடகொரிய அதிபர் கிம் தனக்கு அழகான கடிதங்கள் எழுதி இருப்பதாகவும், அவை அற்புதமான கடிதங்கள் என அவர் கூறினார்.

தாங்கள் காதலில் விழுந்து விட்டோம் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of