அடுத்த 2 போட்டிகளில் நிம்மதியாக ஓய்வெடுக்க போகிறேன்- விராட் கோலி

463

தான் ஓய்வெடுத்தே நீண்ட நாட்கள் ஆகிறது என்பதால் அடுத்த 2 போட்டிகளில் ஓய்வெடுக்கப்போவதாக இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டியளித்துள்ளார்.

அதில், “நியூஸிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது தொடர்பாக பேசிய விராட், தொடர்ந்து மூன்று போட்டிகளை வென்றது ஆச்சர்யமளிக்கிறது.

இரண்டு போட்டிகளை வென்றதற்கு பிறகும் இப்படி ஒரு திறமையை நம் வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இதைவிட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது.

ராயுடுவும், கார்த்திக்கும் விளையாடும் உண்மையில் நாங்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தோம்.அவர்கள் ஒவ்வொரு ரன் அடிக்கும் போது, உடை மாற்று அரையில் கொண்டாடிக்கொண்டிருந்தோம்.இரண்டு போட்டிகளில் தோற்றுள்ளதால் நியூஸிலாந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற சிறிய பதட்டம் இருந்தது. அதை எதிர்கொள்ளும் மனப்பான்மையுடனே விளையாடினோம்.

ஆனால் வழக்கம்போல பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலுமே நமது வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டனர்.எங்கள் வீரர்களின் திறமை மீது உள்ள நம்பிக்கையில் கூறுகிறேன் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெல்வோம்.

நான் ஓய்வெடுத்த நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. ஆஸ்திரேலிய தொடரிலிருந்து தொடர்ச்சியாக விளையாடுவதால் நான் ஓடிக்கொண்டே இருப்பதாக நினைக்கிறேன்.

தற்போது தொடரை வென்றுள்ளதால், மிக்க மகிழ்ச்சியுடன் நிம்மதியாக ஓய்வெடுத்து உட்கார்ந்து போட்டி எப்படி நடக்கிறது என பார்க்கப்போகிறேன் என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of