மக்களிடம் வரவேற்பை பெற்ற ‘ஐ லவ் கோவை’ : அப்படின்னா என்ன?

294

தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம் சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, உக்கடம் பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளால் புதுப்பொலிவு பெற்று வருகிறது. இன்னும் பணிகள் முழுமையடையாத நிலையில், தற்போது நடைபெற்று வரும் பணிகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், உக்கடம் பெரிய குளம் பகுதியில் ‘ஐ லவ் கோவை’ என்னும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களே பெரும்பாலும் பரவி வரும் நிலையில், கோவையில் இந்த கட்டமைப்பு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of