திருமண அழைப்பிதழ் வழங்கவே அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கிறேன் – ரஜினிகாந்த்

395

திருமண அழைப்பிதழ் வழங்கவே அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருவதாகவும், அதை தவிர்த்து வேறு எந்த அரசியல் நோக்கம் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமணம் வரும் 11ஆம் தேதி சென்னை போயஸ் தோட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான திருமண அழைப்பிழை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ரஜினிகாந்த் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமண அழைப்பிழை வழங்கினார். அப்போது மகளின் திருமணத்திற்கு வருமாறு, ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஜினிகாந்த் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. முன்னதாக, போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மகளின் திருமணத்திற்கு, திருநாவுக்கரசர் உறுதுணையாக இருந்ததால் அவருக்கு முதல் அழைப்பிதழை வழங்கியதாக தெரிவித்தார்.