முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கிறேன் – ரவீந்திரநாத் குமார்

148

முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் தான் ஆதரிப்பதாக அ.தி.மு.க எம்பி ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.

முத்தலாக் தடை மசோதா மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது, மக்களவையில் அ.தி.மு.க  எம்.பி ரவீந்திரநாத் குமார் ஆதரவாக வாக்களித்தார். ஆனால், மாநிலங்களவையில் அ.தி.மு.க   எம்.பி.க்கள் அனைவரும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

அ.தி.மு.க முத்தலாக் மசோதா விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு எடுத்ததாக தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்நிலையில், முத்தலாக் சட்டத்தை தனிப்பட்ட முறையில் தான் ஆதரிப்பதாக ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.

மேலும், மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது பற்றி யோசித்து கூட பார்த்ததில்லை என்றும், தலைமையின் முடிவுதான் இறுதியானது  எனவும் கூறினார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of