எனது நண்பர் விரைந்து குணமடைய பிராத்திக்கிறேன் – பிரதமர் மோடி

133

கடந்த 3 நாட்களுக்கு முன் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதால், பிரேசில் அதிபர் போல்சனாரோ கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவு நேற்று கிடைத்தது.

இதில் அவருக்கு  கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை போல்சனாரோ தனது பேட்டியின் போது செய்தியாளர்களிடம் நேரடியாக தெரிவித்தார். தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரேசில் அதிபர் போல்சனாரோ குணமடைய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி, எனது நண்பர் அதிபர் போல்சனாரோ கொரோனாவில் இருந்து  விரைந்து குணமடைய பிராத்திகிறேன் மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of