மாற்றங்களை கொண்டுவர விரும்பிய உங்களுக்கு நன்றி | Jothika | Ratchasi

491

‘ராட்சசி’ அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான படம். இப்படம் கல்வியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை மலேசிய அமைச்சர் மாஸ்லே மாலிக் என்பவர் பார்த்து ஜோதிகா மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

joe-and-surya

இந்நிலையில் மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஒரு இந்திய திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்ததோடு, அந்த படத்தில் கூறியது போல் தங்கள் நாட்டில் கல்வியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய தங்களுக்கு எனது நன்றிகள்.

joe

கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்ற எங்களது குழுவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக உங்கள் பாராட்டை நாங்கள் பார்க்கின்றோம், என்று ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of