அதெல்லாம் சும்மா.., உலகக்கோப்பைக்கு ஆட்கள் ரெடி.., ரோகித் சர்மா

626

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் வருகிற 23-ந்தேதிக்குள் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை தெரிவிக்க வேண்டும்.

நியூசிலாந்து முதல் அணியாக 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி ஏறக்குறைய கண்டறியப்பட்டு விட்டது என துணைக்கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஏறக்குறைய இந்திய அணி கண்டறியப்பட்டு விட்டதாக நினைக்கிறேன்.

சில இடங்கள் மட்டுமே இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதெல்லாம் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர்களை பொறுத்தது. அவர்கள் கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர் தேவையா? ஸ்பின்னர் தேவையா? மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவையா?, மாற்று தொடக்க வீரர் தேவையா? என்பதை முடிவு செய்வார்கள்.

இவை அனைத்தும் இங்கிலாந்தின் சூழ்நிலையை பொறுத்தது. கடந்த முறை நாங்கள் இங்கிலாந்தில் விளையாடும்போது மிகவும் வறட்சியாக இருந்தது. தற்போது எப்படி இருக்கும் என்ற தெரியவில்லை.

ஆகவே, வறட்சியாக இருந்தால், கூடுதலாக ஸ்பின்னர் தேவைப்படும். இதை எளிதான முடிவு. அப்போது கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் தேவையிருக்காது’’ என்றார்.

Advertisement