வேண்டும், வேண்டும் நீட் தேர்வு வேண்டும்.., ‘அர்ஜூன் சம்பத்’

421

கோவையில் மாற்று இயக்கத்தினர் இந்து மக்கள் கட்சியில் சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அர்ஜூன் சம்பத் நிகழ்ச்சி முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில்,

“மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் மக்களை திசை திருப்பும் வகையில் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அவர்கள் போலி வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகின்றனர். ஆனால் தமிழக மக்கள் இதற்கு பலியாக மாட்டார்கள்” என தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தில் வாக்குப்பதிவு சித்திரை திருநாளன்று வைத்துள்ளார்கள். இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து போகும். வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும். தேர்தல் கமிஷன் இதனை பரிசீலிக்க வேண்டும்.

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. குற்றவாளிகளை போச்கோ சட்டத்தில் கைது செய்து தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு மதுக்கடைகள் தான் காரணம் என நீதிபதிகள் கூறியது போல, அரசு தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், நீதிமன்றமே முன்வந்து மதுக்கடைக்களை மூட வேண்டும்.

அதிமுக நீட் தேர்வையும், நவோதயா பள்ளிகளை எதிர்த்தாலும், அந்த கூட்டணியில் உள்ள நாங்களும், பாஜகவும் நீட் தேர்வு வேண்டும் எனக் கூறி தான் மக்களிடத்தில் தேர்தலில் பிரச்சாரம் செய்வோம்.

கூட்டணி கட்சிகளுடன் முரண்பாடுகள் இருந்தாலும், கொள்கை ரீதியாக பிரச்சாரம் செய்வோம். பொள்ளாச்சி சம்பவத்தில் மலிவான அரசியலை திமுக நடத்தியது. பொள்ளாச்சி சம்பவத்திற்கு கலாச்சார பண்பாட்டு சீரழிவு தான் காரணம். காவல் துறை காரணம் அல்ல” என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of