பயமா? எனக்கா?… நான் எப்போதும் பயந்தது இல்லை – மன்மோகன் சிங்

596

பத்திரிகையாளர்களை பார்த்து தான் எப்போதும் பயந்தது இல்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள சேஞ்சிஞ் இந்தியா (Changing India) புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மன்மோகன் சிங் தன்னை மவுன மன்மோகன் சிங் என்று பலர் கூறியது குறித்தும் பல விஷயங்கள் குறித்தும் பேசினார். அவர், “காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த போது ‘மவுன மன்மோகன்சிங்’ என்று என்னை பா.ஜ.க கிண்டல் செய்தது. இதே பெயரோடு தான் நான் ஆட்சி முழுவதும் வாழ்ந்தேன் என்றார்.ஆனால், நாட்டில் பல்வேறு மோசமான சம்பவங்கள் நிகழும் போது மோடி வாய் திறக்காமல் இருக்கிறார். நான் ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன். ராஜஸ்தான், சத்தீஸ்கர், மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடனே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்புநீக்க நடவடிக்கை மூலம், நாட்டின் பொருளாதாரத்தை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அழித்துவிட்டது. எனினும், அனைத்து தடைகளையும் தாண்டி, உலகின் சிறந்த பொருளாதாரமாக இந்தியா மாறும். நான் வாய் திறக்காத பிரதமர் என்று நினைப்பவர்களுக்கு `​சேஞ்சிங் இந்தியா’ என்ற எனது புத்தகம் பதிலளிக்கும்” என்றார். மேலும், காஷ்மீரில் 8 வயது சிறுமி பலாத்காரம், உத்தரபிரதேச உன்னாவ் நகரில் இளம்பெண்ணை பாரதிய ஜனதா எம்எல்ஏ பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து பேசிய மன்மோகன் சிங், வாய்திறந்து பேசுங்கள் மோடி, எனக்கு நீங்கள் கூறிய அதே அறிவுரைகளைத்தான் நானும் உங்களுக்கு கூறுகிறேன் என்றார்.

Advertisement