இந்தியாவிடம் ஒப்படைத்தல் – தற்கொலை செய்து கொள்வேன் | Nirav Modi

167

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துவிட்டு தப்பியோடி வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

தாம் கடுமையான பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி, 5ஆவது முறையாக நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, சிறையில், தாம் மூன்று முறை தாக்கப்பட்டதாக நிரவ் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்தியாவிடம் தன்னை ஒப்படைத்தால், தன்னை தானே மாய்த்துக் கொண்டு, தற்கொலை செய்து கொள்வேன் என்றும் தெரிவித்தார். இதையெல்லாம் கேட்ட நீதிபதி, நிரவ் மோடியை வெளியில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் எனக்கூறி, 5ஆவது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது