“அதிக மது குடிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன்” – மோமோ மிரட்டுவதாக எஸ்பி அலுவலகத்தில் இளைஞர் புகார்

330

“அதிக மது குடிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன்” என்று மோமோ மூலம் மிரட்டுவதாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் கொடுத்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.’

புளூவேல்’ விளையாட்டை தொடர்ந்து ‘மோமோ சேலஞ்ச்’ என்ற விளையாட்டு தற்போது ஸ்மார்ட் செல்போன்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டு வாட்ஸ் அப் மூலம் அறிமுகம் இல்லாத எண்ணாக மெசேஜ் வரு

ம்.  அதில், சம்பந்தப்பட்ட செல்போனில் உள்ள தகவல்கள், ரகசியங்களை சேகரித்துள்ளோம் என்றும், நாங்கள் சொல்வதை செய்யாவிட்டால் இதை வெளியிட்டு விடுவோம் என்ற மிரட்டலுடன் கொலை செய்வதாகவும் மிரட்டல் வரும்.

இந்த விளையாட்டால் பலர் பாதிக்கப்பட்டதுடன், உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் கஸ்பாவை சேர்ந்த காதர் என்பவர் மோமோ விளையாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார்.

அந்த மனுவில், கடந்த 4 மாதங்களுக்கு முன் எனது வாட்ஸ்அப்பிற்கு முன்பின் தெரியாத எண்ணிலிருந்து ஒரு மெசேஜ் வந்தது என்றும், அதில் உன் செல்போனில் உள்ள தகவல்கள் எல்லாம் திருடப்பட்டு விட்டது, நான் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றாவிட்டால் அதை வெளியிட்டுவிடுவேன் என்று அனுப்பப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அதை பெரிதுபடுத்தவில்லை என்றும், தற்போது கடந்த 16ம் தேதி இரவு வேறு 2 எண்களில் இருந்து மெசேஜ் வந்ததாகவும், அதில் உன்னை விடமாட்டேன், கொல்லப்போகிறேன் என்று மிரட்டல் வந்தாகவும் கூறியுள்ளார்.

உடனடியாக அதிகளவில் மது குடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் வந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் காதரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பியவர்களின் விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.