10 வரிகள் பேசட்டும் – அப்புறம் ராகுல் சொல்லுவதை கேட்டுக்கொள்கிறேன்

124

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி ராகுல்காந்தி தொடர்ந்து பத்து வரிகள் பேசிவிட்டால் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சவால் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், பாஜக சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கான ஆதரவுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்த சட்டம் மக்களுக்கான சட்டம், அதனால் இந்த சட்டம் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை” என்று தெரிவித்தார். மேலும்”குடியுரிமை குறித்து இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் கட்சி அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து 10 வரிகள் பேசி விட்டால், அவர் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா ராகுல் காந்திக்கு சவால் விடுத்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of