நாட்டிலேயே சிறந்த ஊராட்சியாக மாற்றுவேன் – ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா

350

புதுக்கோட்டை மாவட்டம், வண்ணாரப்பட்டி ஊராட்சியை, நாட்டிலேயே சிறந்த ஊராட்சியாக மாற்றுவேன் என்று ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளம்பெண் சுகன்யா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக 23 வயது இளம்பெண் சுகன்யா, 291 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிடெக் படித்த பட்டதாரியான சுகன்யா, இளம் வயதிலேயே ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, இந்தியாவிலேயே தலைசிறந்த ஊராட்சியாக வண்ணாரப்பட்டியை மாற்றுவதே தனது லட்சியம் என  தெரிவித்தார்.

கஜா புயலால் வண்ணாரப்பட்டி ஊராட்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிய சுகன்யா, மரங்களை அதிகளவில் நட்டு மரம் வளர்ப்புக்காக பாடுபடுவேன் என தெரிவித்தார்.

 

Advertisement