புது நம்பிக்கையுடனும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் | Chandrayaan 2 | Palanisamy

180

வெளிநாட்டு பயணத்தில் உள்ள தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சந்திரயான் -2 விண்கலத்தை ஏவும் திட்டத்திற்காக அல்லும், பகலும் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி, உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த திட்டத்தில் மட்டுமல்லாமல், மேலும் பல திட்டங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் புது நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்டு பல வெற்றிகள் பெற தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of