பூரி கடற்கரையிலும் கொக்கரிக்கும் அபிநந்தனின் வருகை- சுதர்சன் பட்நாயக்

1457

பத்மஸ்ரீ விருதை தனது ஓவியத்தின் மூலம் தன்வசமாக்கிய புகழ்பெற்ற கடற்கரை மணல் ஓவியரான சுதர்சன் பட்நாயக் பல தலைவர்களின் ஓவியங்களையும், சமூக விழுப்புணர்வுகளை ஏற்படுத்தும் ஓவியங்களையும் தொடர்ந்து வரைந்துக்கொண்டு இருப்பவர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய எல்லைக்குக்குள் அத்துமீறி பறந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் அதிரடியாக விரட்டியடித்தனர். அந்த பதில் தாக்குதலின் போது துரதிஷ்டவசமாக இந்திய விமானி தமிழகத்தின் சிங்கக்குட்டி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் சிக்கினார்.

அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என இந்தியா முழுவதும் ஒருமித்த குரலாக ஒளித்ததுமட்டுமின்றி, பல நாடுகள் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அழுத்தங்கள் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், அபிநந்தன் இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டார். அதன் பின் அபிநந்தன் லாகூருக்கு புறப்பட்டு, லாகூரில் இருந்து இந்திய எல்லையான வாகாவுக்கு வந்துக்கொண்டிருக்கிறார்.

அபிநந்தனில் வருகையை இந்தியா முழுவதும் பெரிதும் ஆராவாரத்துடன் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில், சுதர்சன் பட் நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் இவரின் வருகையை கொண்டாடும் வகையில் மணலில் அவரின் படத்தையும் அதுமட்டுமின்றி, “வணங்குகின்றேன் எங்கள் முருக்கு மீசை வீரத்தலைவர் அபிநந்தனை” என்ற உணர்ச்சி பூர்வமான வார்த்தைகளையும் அதில் பதிவிட்டிருந்தார்.

அத்துடன் அவரது டுவிட்டர் பக்கத்தில் அபிநந்தனுக்கு நல்வரவையும், இந்திய விமானப்படைக்கு தனது வீரவணக்கம் என குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of