மோடியின் ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து! – தேர்தல் ஆணையம்!

540

பிரச்சாரத்திற்காக ஒடிசா சென்ற பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். பிரதமரின் சிறப்பு பாதுகாவலர்கள் தடுத்தபோதும் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி முகமது மொஹ்சின் பாதுகாப்பு விதிகளை மீறி செயல்பட்டதாக தேர்தல் ஆணையம் அவரை பணியிடை நீக்கம் செய்தது.

இந்நிலையில் மொஹ்சின் இடை நீக்கத்தை தேர்தல் ஆணையம் திரும்பபெற்றுள்ளது. மேலும் இதுகுறித்த வழக்கு வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of