டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை – IAS அதிகாரிகள் நியமனம்

765

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, டெங்கு, பன்றிக்காய்ச்சலால் பல பேர் உயிரிழந்தனர். மேலும் பல பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காய்ச்சல் பரவாமல் தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒரு அதிகாரி வீதம் 25 IAS அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டிருந்த அதே அதிகாரிகள்தான் டெங்கு, பன்றிக்காய்ச்சல் தொடர்பான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாநிலம் முழுவதும் இந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் ஆய்வறிக்கையை வரும் 29-ஆம் தேதி சமர்பிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement