கஜா புயலால் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களில் கண்காணிப்பு பணிக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

904

கஜா புயலால் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படும் மாவட்டங்களில் கண்காணிப்பு பணிக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழைக்காக 32 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள ஏற்கனவே தமிழக அரசு நியமித்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே, கஜா புயல் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளது.

பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களான கடலூரில் ககன் தீப் சிங் பேடியும், நாகை மாவட்டத்தில் டி.ஜவஹரும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பு கல்லோலிக்கல்லும், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சந்திரமோகனும், திருவாரூர் மாவட்டத்திற்கு மணிவாசன் என மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்

Advertisement